783 views





மோடி என்பார்கள் 
ராகுல் என்பார்கள் 
அவர்கள் கொள்கை என்னன்னு தெரியலே 


ஓட்டு என்பார்கள்
வாக்கு  என்பார்கள் 
ஏன்  இவருக்கு போடுறாங்க தெரியலே 


டெல்லியில்  வீடு 
மொத்த  மதிப்பு மூணு லட்சம் 
சொல்லுறான் ஒரு  அமைச்சன் 

எங்கே  சொல்லையா  நானும் வாங்குறேன் 
கொஞ்சம் பல்லை இளுச்சன் 

அரசில் இல்லாத 
 அம்மையார் புகைப்படம் 
அரசு விழாக்களில் 
அவள் அப்பன் சொத்து 
எடுத்துச் செய்யுறாங்க 
கொஞ்சம் சிரிச்சன் 





நாளைய பிரதமர் 
என்று சொல்லுறாங்க 
இந்நாள் முதல்வரை 


லஞ்சத்தை ஒழிப்பராம் நாளைய நாட்டில் 
இன்னைக்கு கட்சியில் 
இணையறவன் எல்லாம் 
நேற்றைக்கு சிறையில் இருந்தவன் 



லஞ்சத்தை ஒழிப்பேன் 
என்று வந்தவன் 
எங்கோ இன்னும் காணலே 
அவன் நேர்மைக்கு நேரம் சரியில்ல 


கொஞ்சம் பாடுறான் 
கோசம் போடுறான் 
என்றோ இறந்தவன்
 வண்ணத் திரையிலே 

தேர்தல் வந்தது தெரிந்து கொள்ளுங்கள் 
என்று சொல்லியே நகைத்தன் 


நீதி மன்றம் துரத்தும் 
நீதி தேவதை எங்கள்  
முதல் அமைச்சர் 


ஆயிரம்  கொட்டி 
லட்சம் எடுப்பவர் 
முன்னால் முதல் அமைச்சர் 


மக்களாட்சி  என்பார்கள்  இதை 
மக்களை  ஆளும் ஆட்சி தான் இது 



அதிகார மையங்கள் 
பாதுகாப்பு வளையத்துக்குள் 
அவை  தனித் தீவுகள் 


எங்கே புரட்சி 
எங்கே மாற்றம் 
என்று சொல்லியே 

வாழ்வைக் கழிப்பேன் 
 உண்டு  உறங்கியே